Your cart is empty.
பா. செயப்பிரகாசம்
பிறப்பு: 1941
பா. செயப்பிரகாசம் (பி. 1941) காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தவிர்க்க முடியாத இவர், மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை (தமிழ்) படித்து, 1968 முதல் 1971வரை கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் செய்தி - மக்கள் தொடர்புத் துறையில் செய்தி - மக்கள் அலுவலர் பணி, இணை இயக்குநராகப் பணி ஓய்வுபெற்றார். தாமரை, கணையாழி, தினமணி, புதிய பார்வை, தீராநதி, காலச்சுவடு, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், உயிர்மை, உயிரெழுத்து, மனஓசை போன்ற இதழ்களில் கவிதை, கதை, கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கீற்று, பொங்கு தமிழ் போன்ற இணைய இதழ்களில் படைப்புகள் தொடர்ந்து வெளிவருகின்றன. மனஓசை என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டார். உருவகக் கதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் விமர்சனம் போன்றவையும் எழுதிவருகிறார். முகவரி : 10, முதல் குறுக்குத் தெரு, பாரி நகர், லாசுப் பேட்டை அஞ்சல், புதுச்சேரி 605 008. தொலைபேசி : 91 - 94440 90186 மின்னஞ்சல் : jpirakasam@gmail.com