Your cart is empty.
டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்
பிறப்பு: 1972
டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் (பி. 1972)
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர். பதினைந்து நாவல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் 29 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ‘Problemski Hotel', ‘The Misfortunates' ஆகியவை இவரது முக்கியமான நாவல்கள்.
இருபது வயதுகளில் துவங்கிய எழுத்துப் பயணத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான 'Problemski Hotel' நாவல் திருப்புமுனையாக அமைந்தது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. வாழ்வைப் பிரதிபலிக்கும் தொகுப்பு நூல்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைத் தொட்டு விரித்து, சமூகம் பற்றிய கூர் அவதானிப்போடு அப்பட்டமாக அங்கதச் சுவையுடன் எழுதும் படைப்பு முறைக்காக வாசகர்களால் கொண்டாடப்படுபவர் டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பிராப்ளம்ஸ்கி விடுதி
பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர மேலும்