Your cart is empty.
கீதாஞ்சலி. ஸ்ரீ
பிறப்பு: 1967
பெரிதும் பேசப்பட்ட இவரது நாவல் ‘மணல் சமாதி’ 2022ஆம் ஆண்டுக்கான ‘இன்டர்நேஷனல்
புக்கர் பரிசை’ வென்றது. இதுவரையில், இவர் எழுதிய ஐந்து நாவல்களும் ஐந்து குறுநாவல்களும்
பிரபல இந்தி எழுத்தாளர் முன்ஷி ப்ரேம் சந்த் குறித்த ஒரு ஆராய்ச்சி நூலும் வெளிவந்துள்ளன.
இவரது சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்
பட்டுள்ளன. இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இவர் இலக்கிய/மொழிபெயர்ப்புக்
கட்டுரைகளை எழுதி வருகிறார். நாடகங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். வனமாலி தேசிய விருது,
க்ருஷ்ண பல்தேவ் வைத் விருது, கதா யூ கே விருது, இந்தி அகாதமி இலக்கிய விருது, த்விஜதேவ்
விருது போன்ற பெருமைமிக்க விருதுகளால் இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். ‘ரெசிடென்சி -
ஃபெல்லோஷிப்’ பெற்று, ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து, ஃப்ரான்ஸ்,
கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இவருடைய நாவல் ‘மணல் சமாதி’,
2021ஆம் ஆண்டுக்கான Emile Guinet விருதுக்கான குறும்பட்டியலிலும் இடம்பெற்றது
குறிப்பிடத்தக்கது.
மின்னஞ்சல்: geeshree@gmail.com
