Your cart is empty.
ஜார்ஜ் ஜோசப்
பிறப்பு: 1996
இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல். இயற்பியலை இளநிலையிலும் தமிழை முதுநிலையிலும் பயின்றவர். பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தகுதித் தேர்வில் தேர்ச்சி (JRF) பெற்றவர். தற்போது ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை முழுநேரமாக மேற்கொண்டு வருகிறார். பல்வேறு அச்சு, இணைய இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை என எழுதிவருகிறார். ‘எமரால்ட்’, ‘பெருநெஞ்சன்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளும் ‘பூனைகளில்லா உலகம்’, ‘இஸ்மாயில்’ ஆகிய இரு மொழிபெயர்ப்பு நாவல்களும் வெளிவந்துள்ளன. ‘எமரால்ட்’ தொகுப்பிற்காகத் திருக்கார்த்தியல் (2024) விருதும் ‘பெருநெஞ்சன்’ தொகுப்பிற்காகப் படைப்பு விருதும் (2025) பெற்றவர். தற்போது தாய், தந்தை, மனைவி மகனுடன் திருச்சியில் வசித்துவருகிறார்.
மின்னஞ்சல் : george.joshe@gmail.com
தொலைபேசி : 9788784958
