Your cart is empty.
ஜான் ஜுபர்ஸிக்கி
பிறப்பு: 1920
ஜான் ஜுபர்ஸிக்கி 40 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவைப் பற்றி ஆய்வு செய்துவரும் ஆஸ்திரேலிய எழுத்தாளர் இந்தியாவில் அயலகத் துறை அதிகாரியாகவும் வெளிநாட்டுச் செய்தியாளராகவும் பணியாற்றியவர். இந்தியச் சமூகம், பண்பாடு, அரசியல் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இந்தியவியல் குறித்துக் கற்பித்திருக்கிறார். ‘The Shortest His tory of India’, ‘The House of Jaipur: The Inside Story of India’s Mos t Glamorous Royal Family’, ‘Jadoowallahs, Jugglers and Jinns: A Magical His tory of India’, ‘The Mys terious Mr Jacob: Diamond Merchant, Magician and Spy’, ‘The Las t Nizam: The Rise and Fall of India’s Greates t Princely State’ ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். அமெரிக்க தேசியப் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய வரலாறு, இந்தி ஆகியவற்றைப் பிரதான பாடங்களாகப் படித்தவர். நியூ சவூத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். தி ஆஸ்திரேலியன் இதழின் வெளிநாட்டு உதவி ஆசிரியராகப் பணியாற்றிய ஜான் தற்போது முழு நேர எழுத்தாளராகப் பணியாற்றுகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இந்தியாவின் சுருக்கமான வரலாறு
-5,000 ஆண்டுகால இந்திய வரலாறு மிகச் சுருக்கமான வடிவில் இந்தியாவின் பண்டைய
நாகரிகங்களின் இ மேலும்