Your cart is empty.
கா. கைலாசநாதக் குருக்கள்
பிறப்பு: 1921-2000
மயிலாடுதுறையிலிருந்து 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் யாழ்ப்பாணம் நல்லூரில் குடியேறிய கிருஷ்ணய்யர் என்பவரின் ஆறாம் தலைமுறையினர் கைலாசநாதக் குருக்கள். நல்லூர் கந்தசாமி கோவில் அருகே உள்ள ஒரு குருகுலத்தில் ஆரம்பத்தில் படித்தார். சிறுவயதில் தந்தையை இழந்தாலும், கல்லூரிப் படிப்புக்குத் தடை ஏற்படவில்லை. 1953இல் பூனாவில் பிஎச்.டி ஆய்வுக்குச் சென்றபோது, தமிழகத்தில் பல இடங்களில் சமஸ்கிருத சுவடிகளைத் தேடிச்சென்றார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழித் துறைக்கும், இந்து நாகரிகத் துறைக்கும் தலைவராக இருந்தார். கொழும்பு.பேராதனை பல்கலைக்கழகங்களிலும் பணி செய்துள்ளார். தமிழ் தவிர சமஸ்கிருதம். பாளி. ஆங்கிலம், லத்தீன் போன்ற மொழிகளை நன்றாக அறிந்தவர் . எழுபத்தொன்பது வயதுவரை வாழ்ந்த இவர், எழுதியவை 10 புத்தகங்கள். 8 தமிழ்க் கட்டுரைகள். 8 ஆங்கிலக் கட்டுரைகள். ஆயிரத்து நூறு பக்கங்கள் கொண்ட இவரது ஆய்வேடு அச்சிடப்படவில்லை. இவர் எழுதிய முக்கியமான நூல்கள் 'வடமொழி இலக்கிய வரலாறு' (1962) சைவத் திருக்கோவிற் கிரியை நெறி' (1963), 'இந்துப் பண்பாடு: சில சிந்தனைகள்' (1985) ஆகியன. இவரது பூர்வீகம் சோழநாடு: வாழ்ந்தது ஈழநாடு: மறைந்தது அவுஸ்திரேலியா .
