Your cart is empty.

இசபெல் அயேந்தே
பிறப்பு: 1942
இசபெல் அயேந்தே, தனது உணர்ச்சிகரமான கதைசொல்லும் திறனுக்காகவும் மாய யதார்த்தத்திற்காகவும் அறியப்பட்ட புகழ்பெற்ற சிலி எழுத்தாளர். பெரும்பாலும் தனிமனித, வரலாற்று நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட அவரது படைப்புகள், காதல், மானுடத்தின் போராட்டம், நாடுகடத்தல், நினைவாற்றலின் சக்தி ஆகியவற்றை ஆராய்கின்றன. பல தலைமுறைகளின் செறிந்த கதைகளின் மூலம் அரசியலைத் தனிமனித அனுபவத்துடன் இணைக்கும் தி ஹவுஸ் ஆஃப் தி ஸ்பிரிட்ஸ், ஈவா லூனா போன்ற இவரது நாவல்கள் அவரது இலக்கிய மதிப்பை உறுதிப்படுத்தியுள்ளன. அயேந்தே தனது எழுத்தின் மூலம் வலுவான பெண் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுப்பதோடு, லத்தீன் அமெரிக்க வரலாறு, அடையாளம் ஆகியவற்றின் சிக்கல்களை ஆராய்கிறார். இவரின் படைப்புகள் பல சர்வதேச மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இசபெல் அயேந்தேவின் கடலின் நீண்ட இதழ் என்ற இந்த நாவல் கவிஞர் பாப்லோ நெரூடா ஏற்பாடு செய்த வின்னிபெக் கப்பலில் சிலிக்கு தப்பிச் செல்லும் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர் அகதிகளைப் பின்தொடரும் வரலாற்று நாவல். நாடுகடத்தல், மானுடத்தின் மீண்டெழும் தன்மை, காதல் ஆகியவை மூலம் இந்த நாவல் தனிமனித அனுபவத்தை அரசியல் வரலாறுகளுடன் பின்னிப் பிணைந்து, அயேந்தேவின் தனித்துவமான புனைகதை சொல்லும் ஆற்றலையும் வரலாற்று யதார்த்தத்தையும் விறுவிறுப்பாகக் காட்டுகிறது.