Your cart is empty.
கலாப்பிரியா
பிறப்பு: 1950
கலாப்ரியா (பி. 1950) திருநெல்வேலியில் பிறந்தவர். தந்தை கந்தசாமி, தாயார் கோமதி. நெல்லை ம.தி.தா. இந்துக்கல்லூரியில் கணிதவியல் இளங்கலை, தூய யோவான் கல்லூரியில் கணிதவியல் முதுகலை பயின்றவர். 1969 முதல் கவிதைகள் எழுதி வருகிறார். 2009 முதல் கட்டுரைகளும் எழுதி வருகிறார். கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்புகளாக 31 நூல்கள் வெளிவந்துள்ளன. பல கவிதைகள் ஆங்கிலம், ஃபிரெஞ்சு, இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் கலைமாமணி விருது உட்படப் பல விருதுகள் பெற்றிருக்கிறார். பதிவுகள் இலக்கிய அமைப்பின் சார்பாக பிரம்மராஜனுடன் இணைந்து குற்றாலத்தில் இவர் நடத்திய கவிதைப் பட்டறைகள், கருத்தரங்குகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தவை. தென்காசி அருகே இடைகாலில் வசித்து வருகிறார். மனைவி: சரஸ்வதி (முதுகலைக் கணித ஆசிரியை - பணி நிறைவு), மகள்கள்: அகிலாண்டபாரதி, மருத்துவர்; தெய்வநாயகி, பொறியாளர். மின்னஞ்சல்: kalapria@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
எட்டயபுரம் (இ-புத்தகம்)
- கலாப்ரியா எழுதிய 'சுயம்வரம்', 'ஞான பீடம்” ஆகியவற்றைத் தொடர்ந்து வந்த நீண்ட கவிதை எட்டயபுரம்(198 மேலும்


