Your cart is empty.
கொண்டபல்லி கோடேஸ்வரம்மா
பிறப்பு: 1921
கொண்டபல்லி கோடேஸ்வரம்மா (பி. 1921) இளம் வயதிலேயே மணம், பின் கணவனின் மரணத்தையும் எதிர்கொண்ட கொண்டபல்லி கோடேஸ்வரம்மா 1939இல் இடதுசாரித் தலைவரான கொண்டபல்லி சீதாராமையாவை மணம்புரிந்துகொண்டார். 1940 முதல் தீவிர அரசியல் கலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் இவரது வாழ்க்கை, சுதந்திரப் போராட்டம், கம்யூனிஸ்டு கட்சி, நக்ஸலைட் போராட்டங்கள் ஆகிய இயக்கங்களின் வரலாற்றோடு இணைந்தது. பல வருடத் தலைமறைவு வாழ்க்கை, சீதாராமையாவின் பிரிவு, பிள்ளைகளின் இளவயது மரணம் இவற்றைத் தனியாக எதிர்கொண்டு, தனக்கான சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டு, பேரக்குழந்தைகளை ஆளாக்கிய கோடேஸ்வரம்மா ஆந்திர மஹிளா சபா, விகாஸ வித்யாவனம் ஆகிய அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டார். இரண்டு கதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு ஆகியன இவர் எழுதி வெளிவந்திருக்கின்றன.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஆளற்ற பாலம்
இயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட வரலாற்றில் அடங் மேலும்