Your cart is empty.
லாவண்யா சுந்தரராஜன்
பிறப்பு: 1971
திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்தார். பெங்களூருவில் வசிக்கிறார். மென்பொருள் நிறுவனமொன்றில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
இவருடைய கவிதைத் தொகுப்புகள்: ‘நீர்க்கோல வாழ்வை நச்சி’ (2010), ‘இரவைப் பருகும் பறவை’ (2011), ‘அறிதலின் தீ’ (2015), ‘மண்டோவின் காதலி’ (2021).
சிறுகதைத் தொகுப்புகள்: ‘புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை’ (2019), ‘முரட்டுப் பச்சை’ (2022), ‘நீல மிடறு’ (2023), ‘அதே ஆற்றில்’ (2024).
நாவல்: ‘காயாம்பூ’ (2021).
மின்னஞ்சல்: lavanya.sundararajan@gmail.com
இணையதளம்: uyirodai.blogspot.com








