Your cart is empty.
மைக்கேல் அய்வாஸ்
பிறப்பு: 1949
செக் குடியரசைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். 1974இல் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் செக் இலக்கியத்திலும் அழகியலிலும் பட்டம் பெற்றார். பின்னர் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய செக் எழுத்தாளர் என மதிக்கப்படும் ரிச்சர்ட் வார்னரின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். 1970இலிருந்து 1980வரை பல்வேறு பணிகளை இவர் செய்துகொண்டிருந்தார். பதினைந்து வயதிலிருந்தே எழுதத் தொடங்கிவிட்டபோதும் நாற்பது வயதுக்குப் பிறகுதான் இவருடைய முதல் படைப்பு வெளியானது. 'இண்டெர்காண்டினெண்டல் விடுதியில் ஒரு கொலை' என்ற அந்தக் கவிதைத் தொகுப்பு 1989இல் வெளிவந்தது. இவர் இதுவரை எட்டு புனைவு நூல்களைப் படைத்துள்ளார். எட்மண்ட் ஹஸர்லலின் தத்துவம் பற்றிய நூல் ஒன்றும்,ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் பற்றிய எண்ண ஓட்டங்களின் தொகுப்பான நூல் ஒன்றும் எழுதியுள்ளார். தற்சமயம் இவர் ப்ராக்கின் கோட்பாட்டு ஆய்வுகள் மையத்தில் ஆய்வாளராக உள்ளார்.
