Your cart is empty.
ராஜமார்த்தாண்டன்
பிறப்பு: 1948
ராஜமார்த்தாண்டன் (1948) அ. ராஜமார்த்தாண்டன் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் முனைவர் பட்டத்துக்காக மூன்றாண்டுகளுக்குமேல் புதுக்கவிதையில் ஆய்வு செய்தார். 1976 - 1983 வரை ‘கொல்லிப்பாவை’ இலக்கியக் காலாண்டிதழை (12 இதழ்கள்) ஆசிரியராக இருந்து நடத்தினார். ‘தினமணி’ நாளிதழின் ஆசிரியர் குழுவில் இருபது ஆண்டுகள் பணியாற்றினார். கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ‘புதுமைப்பித்தனும் கயிற்றரவும்’ (2000), ‘ராஜ மார்த்தாண்டன் கவிதைகள்’ (2002), ‘புதுக்கவிதை வரலாறு’ (2003) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ‘கொங்குதேர் வாழ்க்கை -2’ (நவீன கவிதைகளின் தொகுப்பு) உள்பட சில நூல்களையும் தொகுத்துள்ளார். மனைவி: ரெங்கம்மாள். குழந்தைகள்: அஜீதா, கிருஷ்ண பிரதீப்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை
‘உரைநடையின் தன்மைகளைத் தக்கவைத்துக்கொண்டு’ நவீன கவிதையைக் கட்டியெழுப்பிய முன்னோடிக் கவிஞர் சுந் மேலும்