Your cart is empty.
ரவிசுப்பிரமணியன்
பிறப்பு: 1963
ரவிசுப்பிரமணியன் (பி. 1963) கும்பகோணத்தில் பிறந்த ரவிசுப்பிரமணியன் எண்பதுகளின் தொடக்கத்தில் எழுதத் தொடங்கி, கவிதை, சிறுகதை, கட்டுரை எனத் தொடர்ந்து எழுதிவருபவர். இவரது கவிதைத் தொகுதிகளுக்காக, தமிழக அரசுப் பரிசு (1992), திருப்பூர் தமிழ் சங்க விருது (1996), சிற்பி இலக்கிய விருது (2015), தி.க.சி. இயற்றமிழ் விருது (2017), மா. அரங்கநாதன் இலக்கிய விருது (2018), தில்லி தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வித்தகர் விருது (2018) போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். சாகித்திய அக்காதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்த இவர், தற்போது சில இலக்கிய விருதுகளின் நடுவர் குழுவிலும் உள்ளார். தமிழின் குறிப்பிடத்தக்க ஆவணப்பட இயக்குனரான இவர், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன், ஜெயகாந்தன், சேக்கிழார் அடிப்பொடி டி.என். ராமச்சந்திரன், திருலோக சீதாராம் போன்ற இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களை இயக்கி உள்ளார். இசையின் மீது ஆர்வம் கொண்டு, தமிழில் முப்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் புதுக்கவிதைகளுக்கும் சங்கக் கவிதைகளுக்கும் மெட்டமைத்துப் பாடிவருகிறார். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருந்து சில கலை இலக்கியப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். கைபேசி: 9940045557 மின்னஞ்சல்: ravisubramaniyan@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஆளுமைகள் தருணங்கள்
தமிழ்நாட்டின் இலக்கிய மரபு, நாட்டார் இலக்கியம், நாட்டார் நிகழ்த்துக்கலை, நாட்டார் சமூகப் பழக்கவழக மேலும்