Your cart is empty.
எஸ். பொன்னுத்துரை
பிறப்பு: 1932 - 2014
யாழ்ப்பாணம் நல்லூரில் பண்டாரக்குளம் பகுதியில் பிறந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். ஆங்கில ஆசிரியை ஈஸ்பரம் அவர்களைத் தனது 24ஆம் வயதில் திருமணம் செய்துகொண்டார். 1981ஆம் ஆண்டு நைஜீரியாவில் ஆங்கில மொழியியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1990இல் ஆஸ்திரேலியாவில் குடியேறி ஆஸ்திரேலியாவிலும் சென்னையிலுமாக வாழ்ந்தார். சென்னையில் மித்ர பதிப்பகத்தை ஆரம்பித்து நிர்வகித்து வந்தார். எஸ். பொவிற்கு மேகலா அநுர, மித்ர, புத்ர, இந்ர எனும் பிள்ளைகள். மித்ர ஈழப்போரில் பங்குபெற்று மாவீரரானார். புத்ர ஒரு விபத்தில் மரணமடைந்தார்.
எஸ்.பொ. ஆப்பிரிக்க நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் தனி ஆர்வம் கொண்டிருந்தார்.