எஸ்.எல்.எம். ஹனீபா (1946) இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே மீராவோடையில் 1946இல் பிறந்தவர். அரசுத்துறையில் கால்நடைகள் அபிவிருத்தி போதனாசிரியராக முப்பதாண்டுகள் கடமையாற்றி - ஓய்வு பெற்றுள்ளார். 1992இல் ‘மக்கத்துச் சால்வை’ சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. 1992இல் கோவை லில்லி தேவசிகாமணி விருதும் 1993இல் இலங்கை அரசு சாகித்ய மண்டல விருதும் பெற்றுள்ளார். இலங்கை அரசின் கல்வித் திணைக்களத்தின் 11ஆம் வகுப்புத் தமிழ்ப்பாடத் திட்டத்தில் ‘மக்கத்துச் சால்வை’ கதை பதினைந்து ஆண்டுகளாக இடம் பெறுகிறது. மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். முகவரி: எஸ். எல். எம். ஹனீபா எழுவான் பண்ணை திருகோணமலை நெடுஞ்சாலை ஓட்டமாவடி - 30420 இலங்கை.