Your cart is empty.
சச்சிதானந்தன் சுகிர்தராஜா
சச்சிதானந்தன் சுகிர்தராஜா இலங்கையரான இவர் உத்தியோக நியமனம்பெற்று இங்கிலாந்து சென்றவர் கடந்த முப்பது ஆண்டுகளாக அங்கேயே கல்விசார் சூழலில் வாழ்ந்துவருகிறார். பின் காலனியத்துவ கருதுகோளை உபயோகித்து காலனிய, பின் காலனிய காலத்தில் எவ்வாறு திருப்பிரதிகள் கையாளப்பட்டன என்பதுபற்றி ஆங்கிலத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இவரால் எழுதப்பட்ட நூல்களும் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. பார்மீங்கம் பல்கலைக் கழகம் இவரின் ஆக்கங்களின் விசேஷத் தன்மையை அங்கீகரித்து தனிப் பேராசிரியர் இருக்கையை (personal professorial chair) அளித்து இவரைக் கௌரவித்தது. இவருடைய படைப்புகளைப் பிரபல பல்கலைக்கழகப் பிரசுரங்களான கேம்பிரிஜ், ஒக்ஸ்போர்ட் மற்றும் கல்வித்தகமை வெளியீட்டாளர்களான பிளக்வேல், கொண்டிநியம் வெளியிட்டிருக்கின்றன. இவரின் தமிழ் எழுத்துகள் எண்பதுகளில் கணையாழியில் பிரசுரமாயின. சர்வகலாசாலை பணி நிமித்தமாகக் கொஞ்சம் ஒதுங்கி இருந்தவர் மறுபடியும் தமிழில் எழுதத் தொடங்கியிருக்கிறார். இவருடைய சிறுகதைத் தொகுப்பு ‘அ/சாதாரண மனிதன்’ (2008) காலச்சுவடு பிரசுரமாக வெளிவந்திருக்கிறது.