Your cart is empty.
சல்மா
சல்மா இயற்பெயர் ராஜாத்தி (எ) ரொக்கையா. திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி சிறப்பு ஊராட்சி மன்றத் தலைவியாகவும் சமூக நலத்துறை வாரியத் தலைவியாகவும் பணியாற்றினார். இரண்டு கவிதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன. ‘கனவுவெளிப் பயணம்’ என்ற பயணநூலும் வெளியாகி உள்ளது. இவருடைய ‘இழப்பு’ சிறுகதை ‘கதா - காலச்சுவடு’ போட்டியில் பரிசு பெற்றது. சேனல் 4 தயாரிப்பில் இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சல்மா என்கிற ஆவணப்படம் கிம் லாங்கினாட்டோ என்கிற பிரிட்டிஷ் இயக்குநரால் இயக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 14 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டு ஃபிராங்பர்ட் புத்தக விழா, 2009 லண்டன் புத்தகக் கண்காட்சி, 2010 சீனாவின் பெய்சிங் புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் பங்கேற்றார். சல்மாவின் படைப்புகளை முன்வைத்து நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு சிகாகோ பல்கலைக்கழகத்தில் 2007 மே மாதம் நடைபெற்றது. ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஜெர்மன், கடாலன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வோடோ போன் (vodafone) க்ராஸ்வோர்டு பரிசு, மான் ஆசியா பரிசு ஆகியவற்றின் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றது. ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பு மலையாளத்திலும் வெளிவந்துள்ளது. பெற்றோர் சர்புனிஷா, சம்சுதீன். கணவர் அப்துல் மாலிக். மகன்கள் சலீம், நதீம். தொலைபேசி : 9444918604 மின்னஞ்சல் : tamilpoetsalma@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பால்யம்
துயரங்களும் சிக்கல்களும் நிறைந்திருக்கும்போது, புதிய வழியைக் கண்டு மீட்சி பெறும் வழிமுறைகளும் தெர மேலும்
மனாமியங்கள்
சல்மாவின் நாவல் முழுமையாகப் பெண்ணுலகத்தால் நிரம்பியிருக்கிறது. புற உலகம் அறியாத பெண்களின் உள் உலக மேலும்
இரண்டாம் ஜாமங்களின் கதை
இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை. வெளிவந்தைவையும் ஓர மேலும்
சாபம்
சல்மாவின் கதை வெளிகள் பெண்களின் பதற்றமான காலடிகளின் மெல்லிய சப்தங்களால் நிரம்பியவை. அவர்களது கண்ண மேலும்
தானுமானவள்
இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குப் புதிய கவிதை அனுபவங்களைக் கொண்டுவந்த வியத்தகு கவி சல்மா மேலும்
பச்சைத் தேவதை
சமூகம், அரசியல் மற்றும் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் உடையவை, இல்லாதவை என நவீன கவிதைகளைப் பிரித் மேலும்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
நவீனத் தமிழில் பெண்ணெழுத்து தீவிரம் பெற்ற கட்டத்தில் முதன்மையாக வெளிப்பட்டவற்றில் ஒன்று சல்மாவின் மேலும்