Your cart is empty.
சாபம்
சல்மாவின் இந்தத் தொகுப்பில் உள்ள மேலும்
சல்மாவின் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் வரும் பெண்கள் எப்போதும் பதற்றம் மிகுந்த சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். தயக்கமும் தடுமாற்றமும் அவர்களது இயல்பாகிவிட்டன. பரந்து விரிந்த ஆகாயத்தை அவர்கள் அதிகம் பார்ப்பதில்லை. நான்கு சுவர்களுக்கு நடுவில் வாழும் அவர்கள் அந்தக் குறுகிய இடத்திற்குள் வாழக் கற்றுக்கொள்கிறார்கள். இவர்களது வாழ்வின் புறச் சூழலையும் அந்தச் சூழலால் இவர்களுடைய அகம் கட்டமைக்கப்படுவதையும் சல்மா இந்தக் கதைகளில் காட்டுகிறார்.
சல்மாவின் சொற்கள் புற நிர்ப்பந்தங்களால் ஒடுங்கிய மன உணர்வுகளைக் கச்சிதமாகச் சித்தரிக்கின்றன. சூழல் குறித்த வர்ணனைகளும் பாத்திரங்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே வெளிப்படுகின்றன. சொற்களில் தெரியும் கசப்பும் வெறுமையும் இந்தப் பெண்களின் நிலையை நமக்குச் சொல்கின்றன. மனித இயல்புகள் அழகாக வெளிப்படுகின்றன. மூடிய கதவுகளுக்குள் நடமாடும் பெண்களின் காலடித் தடங்கள் என்று இந்தக் கதைகளைச் சொல்லலாம்.
சல்மா
சல்மா இயற்பெயர் ராஜாத்தி (எ) ரொக்கையா. திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி சிறப்பு ஊராட்சி மன்றத் தலைவியாகவும் சமூக நலத்துறை வாரியத் தலைவியாகவும் பணியாற்றினார். இரண்டு கவிதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன. ‘கனவுவெளிப் பயணம்’ என்ற பயணநூலும் வெளியாகி உள்ளது. இவருடைய ‘இழப்பு’ சிறுகதை ‘கதா - காலச்சுவடு’ போட்டியில் பரிசு பெற்றது. சேனல் 4 தயாரிப்பில் இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சல்மா என்கிற ஆவணப்படம் கிம் லாங்கினாட்டோ என்கிற பிரிட்டிஷ் இயக்குநரால் இயக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 14 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டு ஃபிராங்பர்ட் புத்தக விழா, 2009 லண்டன் புத்தகக் கண்காட்சி, 2010 சீனாவின் பெய்சிங் புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் பங்கேற்றார். சல்மாவின் படைப்புகளை முன்வைத்து நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு சிகாகோ பல்கலைக்கழகத்தில் 2007 மே மாதம் நடைபெற்றது. ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஜெர்மன், கடாலன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வோடோ போன் (vodafone) க்ராஸ்வோர்டு பரிசு, மான் ஆசியா பரிசு ஆகியவற்றின் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றது. ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பு மலையாளத்திலும் வெளிவந்துள்ளது. பெற்றோர் சர்புனிஷா, சம்சுதீன். கணவர் அப்துல் மாலிக். மகன்கள் சலீம், நதீம். தொலைபேசி : 9444918604 மின்னஞ்சல் : tamilpoetsalma@gmail.com
ISBN : 9789381969588
SIZE : 14.0 X 0.9 X 21.5 cm
WEIGHT : 180.0 grams
Salma’s short stories deal with women who fly like butterflies and glow worms. They create their own narrow path ways within space inclosed by walls and morality.














