Your cart is empty.
எஸ் . திவாகர்
பிறப்பு: 1946
இக்காலம் கன்னட இலக்கிய உலகில் ஃபேன் டசி எழுத்து என்றதும் நினைவுக்கு வரும் முதல் பெயர் திவாகர். மிகச் சிறந்த கன்னட மொழி பெயர்ப்பாளர். பெங்களூர்க் கிராமப்புற மாவட் டத்துத் தேவனஹள்ளித் தாலுக்காவின் சோமத் தனஹள்ளியில் 1946ஆம் ஆண்டு பிறந்த திவாகர் தார்வாடிலுள்ள கர்நாடகப் பல்கலையில் பிஏ பட்டம் பெற்றார். பல முன்னணிக் கன்னடப் பத்திரிகைகளில் உதவியாசிரியராகவும் ஆசிரிய ராகவும் விளங்கிய திவாகருக்கு 1967 முதல் 1971 வரை சோவியத் செய்தி இதழின் கன்னடத்துறை யில் பணி. தற்போது சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் கன்னடச் செய்தித் தொகுப்பாளர். திவாகரின் பல சிறுகதைகள் தமிழ் நிலப்பரப்பில் களம் கொண்டவை.
இதுவரை வெளிவந்துள்ள இவரது நூல்கள் பதினெட்டு. திவாகரின் சொந்தப்படைப்புகள்: நாவல்கள், சிறுகதை, கவிதைத் தொகுதிகள் தலா இரண்டு. நோபல் பரிசு பெற்ற மூன்று எழுத்தா ளர்களின் நாவல்கள், உலகின் மிகச் சிறியகதை களின் தொகுப்பு இவரது பேர் சொல்லும் ஆங்கிலம் வழிக் கன்னட மொழியாக்கங்கள். அதோடு, நோபல் பரிசு பெற்ற ஐம்பது எழுத்தா ளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் கன்னட மொழிபெயர்ப்பு திவாகருக்குக் கர்நா டகச் சாகித்திய அகாதமிப் பரிசு பெற்றுத் தந் தது. இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கன்னடச் சிறுகதைகளின் தொகுப்பு நூலுக்குக் கர்நாடக அரசின் பரிசும் அண்மையில் தன் ஒட்டுமொத்த இலக்கியப் பணிக்காகக் கர்நாடக அரசின் ராஜ் யோத்ஸவ விருதும் இவர் பெற்ற கீர்த்திகளில் அடக்கம்.தங்கத்தாமரை தேசிய விருது பெற்ற கடஸ்ரார்த்த கன்னடத் திரைப்படத்தின் துணை இயக்குநராகவும் கிரஹன படத்தின் கலை இயக்குநராகவும் திவாகர் பங்காற்றியவர். கன்னட இலக்கிய உல கின் எந்த அணியிலும் சேராத திவாகர் தன் இதிஹாச சிறுகதை யைக் குறும்படமாகவும் தயாரித்து இயக்கியுள்ளார்.
இத்தொகுப்பில் இடம்பெறும் திவாகரின் கதை மிருத்தியுஞ்ச யன். மிருத்தியு என்றால் மரணம் அல்லது எமன். மிருத்தியுஞ்சயன் என்பது சிவனைக் குறிக்கும் சொல். சாலையில் நடந்து செல்லும் போது எதிர்கொண்டிருந்தால் அலட்சியப்படுத்திக் கடந்து சென்றி ருக்கக்கூடிய ஒருவனைப் பிணமாகக் காணும்போது அவனைப் பற்றி வேறுவிதமான எண்ணங்களும் ஆர்வமும் தோன்ற, அவன் தொடர்பாக மேற்கொண்டு விபரங்கள் அறிய முயலும் ஓர் இளை ஞனுக்கு ஏற்படும் அனுபவங்கள் இதில் சொல்லப்படுகின்றன. மிக எதேச்சையாக எதிர்கொள்ளப்படும் நிகழ்வுகள் எதிர்பார்க்காத சிக்கல்களுக்கும் திருப்பங்களுக்கும் இட்டுச்செல்லும் வட்டச்சுழல் (labyrinth) தன்மை வாழ்வின் இயல்பாகும் விதம் இதில் கதையாட லாகிறது. வேறுவிதமாகச் சொல்வதென்றால், மேலுக்கு மிக எளி தாகத் தோன்றும் நிகழ்வுகள் உண்மையில் ஆழமான அர்த்தங்களை யும் விளைவுகளையும் உடையவை, அவை பனிப்பாறை (glacier) களைப் போல என்னும் வாதம் மரண முகாந்திரம் கதையாடலாகியுள்ளது.
