சேகர் பாதக் (பி. 1950)
குமாவூன், கர்வால் பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு சிறுகிராமங்களிலும் பயணம் செய்தவர் சேகர் பாதக். இமாலயத்தைப் பற்றிய கலைக்களஞ்சியம் போன்ற அவரது அறிவு அனைவரும் அறிந்தது. 1983ஆம் ஆண்டு இமாலயப் பிரதேசத்தின் ஆராய்ச்சிக்கான பகார் (PAHAR) மக்கள் அமைப்பை நிறுவினார். இமாலயப் பயணியான பண்டிட் நைன் சிங் ராவத் அவர்களின் வாழ்க்கை வரலாறான ‘ஏசியா கீ பீத் பர்’ (ஆசியாவின் பீடத்தில்) நூலை உமாபட்டுடன் இணைந்து எழுதியவர். நைனிதாலில் உள்ள குமாவூன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகவும் நியூ தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம், சமகால ஆய்வு மையத்தின் முதன்மை அறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.