Your cart is empty.
செல்வம் அருளானந்தம்
செல்வம் அருளானந்தம் இலங்கை, யாழ்ப்பாணம் அருகிலுள்ள சில்லாலை என்னும் கிராமத்தில் பிறந்தார்; தற்போது கனடாவில் வசிக்கிறார். கடந்த முப்பதாண்டுகளாக இலக்கியச் சந்திப்புகளையும் கருத்தரங்குகளையும் நடத்திவருகிறார். 1986இல் பாரிஸ் ஆசியன் வெளியீடாக ‘கட்டிடக்காடு’ கவிதைத் தொகுதியும் தமிழினி வெளியீடாக ‘எழுதித் தீரா பக்கங்கள்’ எனும் தன் வரலாற்று நூலும் வெளிவந்துள்ளன. பார்வை (மொன்றியல், கனடா) சிற்றிதழின் ஆசிரியராக இருந்தவர். தேடல் சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் செயல்பட்டுள்ளார்.கடந்த முப்பது வருடங்களாக கனடாவிலிருந்து வெளிவரும் காலம் இலக்கிய இதழின் ஆசிரியர். கனடாவில் ‘வாழும் தமிழ்’ என்ற பெயரில் 1990ஆம் ஆண்டு முதல் புத்தகங்களுக்கான கண்காட்சியை நடத்திவருகிறார்.