Your cart is empty.
ஸ்ரீவிரிஞ்சி
ஸ்ரீவிரிஞ்சி பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஸ்ரீவிரிஞ்சியின் இயற்பெயர் டாக்டர் என்.சி. இராமானுஜாச்சாரி. புதினம் மற்றும் புதினம் அல்லாத பல படைப்புகளை உருவாக்கியவர். முதல் கதை தெலுங்கில் சுதந்திரா என்ற பத்திரிகையிலும் ஆங்கிலப் படைப்பு சாகித்திய அக்காதெமியால் வெளியிடப்படும் இதழிலும் 1979இல் வெளியாயின. இவரது தெலுங்குச் சிறுகதைகளைப் பற்றிய திறனாய்வு கதாராமம் பொட்டி ஸ்ரீராமுலு விருதை 1990இல் பெற்றிருக்கிறது. தற்போது சாகித்திய அக்காதெமி மற்றும் நேஷனல் புக் ட்ரஸ்ட் நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர் குழு உறுப்பினராக இருக்கிறார். மேடம் பிளாவாட்ஸ்கி, டி. சுப்பாராவ் மற்றும் ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி பற்றிய இவருடைய படைப்புகள் உலகளவில் வரவேற்பு பெற்றிருக்கின்றன. ஹிந்து மற்றும் இந்தியா டுடே பத்திரிகைகளில் தொடர்ந்து புத்தக விமரிசனங்கள் எழுதிவருகிறார். பல வருடங்களாக தியோசாபிகல் சொசைட்டியின் உறுப்பினராக இருக்கிறார். தொலைதூரக் கல்வித்திட்டத்தின் இந்தியப் பிரிவில் இணைச்செயலாளராக உள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பலார்ஷாவிலிருந்து நாக்பூருக்கு
தமிழுக்கு மிக அணுக்கமான மொழியாக இருந்தும் தெலுங்கில் நடைபெறும் இலக்கியச் செயல்பாடுகள் நமக்குத் த மேலும்