Your cart is empty.
தீரன் . ஆர்.எம். நௌஸாத்
பிறப்பு: 1960
கிழக்கிலங்கையிலுள்ள பாரம்பரிய முஸ்லிம் கிராமமான சாய்ந்த மருதுவில் பிறந்த இவர் கல்முனையில் தபால் துறையில் தலைமை அலுவலராகப் பணிபுரிகிறார். இவரது சிறுகதைத் தொகுதியான 'வல்லமை தாராயோ.." (2000) கல்முனை புவகம் வெளியீட்டிலும், 'பள்ளிமுனைக் கிராமத்தின் கதை (2003) முஸ்லிம் குரல் வாரமலரிலும், 'வானவில்லிலே ஒரு கவிதை கேளு..!' (2005) ஈழநாதம் வாராந்தரியிலும், 'ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது (2009) - விடிவெள்ளி வார இதழிலும் தொடர்கதைகளாக வெளி வந்துள்ளன.
இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகம் அகில இலங்கை ரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் மலர்வு 74, உதிர்வு 92 (1996) என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றுள்ளார்.
பிரான்ஸ் தமிழ் வானொலியும் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடத்திய அகில உலக வானொலி நாடகப் போட்டியில் 'காகித உறவுகள் (1999) நாடகத்திற்கு மூன்றாம் பரிசு, இலங்கை கலாசார அலுவல்கள் அமைச்சு நடத்திய அரசு ஊழியருக்கான ஆக்கத்திறன் போட்டியில் 'மே மாதம் முதற் பூ (2007) முதற்பரிசு, ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் 'தாய்மொழி' (2008) சிறுகதைக்கு முதல் பரிசு, தமிழ்நாடு ஆழி பதிப்பகமும் எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் 'சாகும்தலம்' (2008) கதைக்காகச் சிறப்பு ஆறுதல் பரிசும் பெற்றுள்ளார்.
இவரது இந்நாவல், காலச்சுவடு நடத்திய அமரர் சுந்தர ராமசாமி 75 நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது.
பெற்றோர்: ராஸிக்காரியப்பர் - ஹாஜரா தம்பதிகள்.
மனைவி பாத்திமா றிபாயா
குழந்தைகள்: ரப்ஸன், பிரின்ஸ், தீப்ஸிகா
Home Address: No. 01, Main Street Sainthamaruthu 01. Srilanka.
Telephone : 067 2222593.
Cell : 071 4457 593
Email : makariapper@gmail.com
