Your cart is empty.
தொ. பத்தினாதன்
பிறப்பு: 1974
இலங்கையில் மன்னார் மாவட்டம் வட்டக்கண்டல் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்தபோது யாழ் கோட்டையில் 1990இல் ஏற்பட்ட போர் காரணமாகத் தனது பதினாறாவது வயதில் அகதியாகத் தமிழகம் வந்தார். எட்டு ஆண்டுகள் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி அகதிகள் முகாமில் வாழ்ந்த பின்னர் சென்னை சென்ற இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பொதுநிர்வாகம் படித்தார். கால்நூற்றாண்டாகத் தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் குறித்துத் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, இவருடைய முதல் புத்தகமான ‘போரின் மறுபக்கம்’ பரவலான கவனம் பெற்றது. தற்போது காலச்சுவடில் பணி செய்யும் இவர் முகாமிற்கு வெளியே அரசு அனுமதி பெற்று மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தமிழகத்தின் ஈழ அகதிகள்
ஈழத் தமிழர் பற்றிய அக்கறையைப் பல வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் நமது. அரசியலுக்க மேலும்
தகிப்பின் வாழ்வு
அகதிகளின் வெளியேற்றம், நவீன அடிமைமுறை, ஆட்சி மாற்றம், வீடுகள், மதங்கள், சாதிகள், முகாம்கள், பலிகள மேலும்
போரின் மறுபக்கம்
போரில் மடிவதைக் காட்டிலும் கொடிது அதுதரும் துயரத்தோடு வாழ்வது! தமிழகத்தில் வாழ நேர்ந்திருக்கும மேலும்