Your cart is empty.
ய. மணிகண்டன்
பிறப்பு: 1965
ய. மணிகண்டன் (பி. 1965) தமிழ் யாப்பியல், சுவடிப்பதிப்பியல், பாரதியியல், பாரதிதாசனியல் ஆகிய களங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நிகழ்த்தியுள்ள முனைவர் ய. மணிகண்டன் தஞ்சை சரசுவதி மகால் நூலகத் தமிழ்த் துறையில் பத்தாண்டுகளுக்கும்மேல் பணியாற்றியவர்; சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையின் பேராசிரியர்-தலைவராகப் பணியாற்றி வருபவர். ‘தமிழில் யாப்பிலக்கணம்: வரலாறும் வளர்ச்சியும்’, ‘நேரிசை வெண்பா இலக்கியக் களஞ்சியம்’, ‘பாரதிதாசன் யாப்பியல்’, ‘பாரதிதாசனின் அரிய படைப்புகள்’, ‘பாரதிதாசன் இலக்கியம்: அறியப்படாத படைப்புகள்’, ‘மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும்’, ‘ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள்’, ‘பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள்’, ‘மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்’, ‘மணிக்கொடி கவிதைகள்’ உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை ஆக்கியவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பாரதியும் உ,வே,சா,வும்
-இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் தமிழாளுமைகள் பாரதியும் உ.வே.சா.வும். உலகச்
செவ்வியலிலக்க மேலும்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
தமிழ் நவீனத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படும் ‘மணிக் கொடி’க்கும் திராவிட இயக்கக் கவிஞராகக் கொண் மேலும்
தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி
தமிழ் யாப்பு இலக்கண வரலாற்று நூல் இது. காலந்தோறும் மாறியும் வளர்ந்தும் வந்துள்ள யாப்பு இலக்கணத்த மேலும்