சமூகத் தாக்கத்தை நேரடியாக உள்வாங்கிக்கொண்ட இலக்கிய வடிவமாக நாவலே கருதப்படுகிறது. இதன் சமீபத்திய உதாரணம், மு.குலசேகரன் எழுதியுள்ள ‘தங்க நகைப் பாதை’.
பிரிக்கப்படாத வடார்க்காட்டு மக்களின் வாழ்க்கையைத்தான் நாவல் பேசுகிறது. அதேநேரத்தில் ஜவ்வாதுமலை, கானாறு, தோல் தொழிற்சாலை உள்ளிட்ட இடக்குறிப்புகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் அனைவருக்குமான நாவலாகவும் இது இருக்கிறது.