சாதியை வைத்து காதல்கள் முறிக்கப்படுவது இன்னும் நம் சமூகத்தில் இருக்கும் கொடிய நோய். அந்நோய்தான் அவர்கள் பேணும் சாதியை நிலைநாட்டுகிறது என்று நினைத்துக்கொண்டிருப்பது முற்றிலும் மூடத்தனம். இது நிறையக் கிராமங்களில் இன்னும் அழிக்க முடியாத நோயாக இருந்துகொண்டேதான் இருக்கிறது. எத்தனை ஆணவக்கொலைகள்! அதனைக் கருவாகக்கொண்டு இந்த பூக்குழியைப் படைத்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் எழுத்தாளர் பெருமாள் முருகன்…