“மனதிற்கும் உடலுக்குமான சதிராட்டத்தில் உடலின் ஆளுமை அதன் தேவை ஆட்டத்தின் முடிவில் அதன் நிலைப்பாடு குறித்த புரிதல்களை யாக்கை விரிவாக அலசுகிறது. காமம் என்பதின் மீது கவிழும் சலிப்பு குறித்து நுட்பமான அவதானிப்பு நாவலின் பலத்தைக் கூட்டுகிறது. யாக்கையின் புரிதலுக்கும் விரிதலுக்கும் அதுவே திடமான உள்ளீடு. நல்ல முயற்சிக்கும் மாறுபட்ட சிந்தனைக்கும் ஆழமான அனுபவத்திற்கும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமாருக்குப் பாராட்டுகள்.”