காச்சர் கோச்சர் -அமைதியாக ஆரம்பித்து, ஆர்பாட்டமின்றி உள்நழைந்து உங்களை ஆக்கிரமிக்கும் நாவல். இதில் திடீர் திருப்பங்களோ, வாசகரின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றே திணிக்கப்பட்ட விறுவிறுப்பான எழுத்துநடையோ இல்லை. மாறாக ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்ததின் வாழ்வுமுறையையும், வளம் பெருகியதும் அந்த வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் அருகாமையில்அமர்ந்து பார்ப்பது போன்றதொரு அனுபவத்தை தருகிறது. நடுத்தர வர்க்கத்தின் கஷ்டங்களை மட்டும் பேசாமல் அதன் அன்றாடங்களில் ஒளிந்திருக்கும் அழகியலையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது…