Your cart is empty.
19 Feb 2026
சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல்
நூல் பரிந்துரை
”தவறவிடக் கூடாத படைப்பு”
…வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு அதன் வழியே சமகாலத்தையும் விசாரத்துக்குட்படுத்தும் படைப்புகள் தமிழில் வெகு சிலவே வெளிவந்திருக்கின்றன. அவற்றுள், கவிஞர் சுகுமாரன் எழுதிய 'பெருவலி'க்கு மிக முக்கியமான இடம் உண்டு...
…ஷாஜஹானுக்கும் ஜஹனாராவுக்குமான உறவைப் பூடகமாகத் தொட்டுப் பேசுமிடத்தையும், வெளிப்படுத்தவியலாத காதலும் தாபமும்கொண்டு ஜஹனாரா புழுங்குவதைக் கனவுகள் வழியே காட்சிப்படுத்தும் உத்தியையும் ஆங்காங்கே தீற்றுக்களாகச் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக ஒளரங்கசிப்பைப் பற்றி கட்டியெழுப்பப்படும் பிம்பத்தையும் கவி சுகுமாரனின் தேர்ந்த புனைவுமொழிக்குச் சான்றாகக் கூறலாம்…
நன்றி: கார்த்திக் பாலசுப்ரமணியன் (முகநூலிலிருந்து)
முழுப்பதிவுக்கு: