ஜான் சுந்தரின் ‘குறுமக்கள் கொட்டாரம்’ கட்டுரைகள்
”சமீப காலத்தில் இந்த அளவுக்கு மகிழ்ச்சியும் பரவசமும் கொடுக்கும் ஒரு புத்தகத்தைப் படித்ததில்லை.”
பாவண்ணன்
…மழலையர் பள்ளியில் தன் மகனைச் சேர்ப்பதற்காக வந்திருக்கும் ஒரு தாயோடு தொடங்குகிறது ஒரு சித்திரம். “மிஸ் ஏதாவது கேள்வி கேட்டா, நீ பதில் சொல்லணும் புரியுதா?” என்று சிறுவனுக்குப் பயிற்சி கொடுக்கிறாள். அந்த இளம்தாய். அவன் புன்னகை மாறாத முகத்துடன் மிகவும் பிடிவாதமாக “மாட்டேன்… சொல்ல மாட்டேன்” என்று மறுக்கிறான். அந்தத் தாயால் அச்சிறுவன் மனத்தை மாற்றவே முடியவில்லை. அதற்குள் அவர்கள் பெயர் அழைக்கப்பட்டுவிட இருவரும் எழுந்து டீச்சர் அறைக்குள் செல்கிறார்கள். சிறுவனின் பிடிவாதத்தை ஏற்கனவே அறிந்துகொண்ட டீச்சர் அவன் பக்கமே திரும்பாமல் அவன் அம்மாவிடம் மட்டுமே உரையாடத் தொடங்குகிறார். எல்லாமே அவனைப் பற்றிய கேள்விகள். ஆனால் அனைத்தையும் அந்தத் தாயாரிடமே கேட்கிறார். பிறகு சிறுவர்களிடம் கேட்பதுபோல சுவரில் தொங்கும் படங்களைச் சுட்டிக்காட்டி ஒவ்வொன்றையும் என்ன என்ன என்று கேட்கிறார். அவர் சொல்லும் ஒவ்வொரு பதிலுக்கும் அவருக்குப் பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறார். தன்னைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் தன் தாயாரிடம் மட்டுமே பேசிச் சிரிப்பதைப் பார்க்கப் பார்க்க சிறுவனுக்கு ஏக்கமாக இருக்கிறது. தனக்குத் தெரிந்த பதில்களைச் சொல்ல வேண்டும் என்று அவன் துடிக்கிறான். அப்போதும் டீச்சர் அதைப் பொருட்படுத்தவில்லை. நேரம் கழியக் கழிய சிறுவனுக்கு ஆர்வம் பெருகுகிறது. ‘மிஸ்… நான் சொல்றேன் மிஸ்’ என்று அவனாகவே டீச்சர் கையைப் பிடித்துக் கெஞ்சத் தொடங்குகிறான். அவன் மனத்திலிருந்த தடை சட்டென ஒரே கணத்தில் உடைந்துவிடுகிறது. அருமையான சொற்சித்திரம்…
நன்றி: பாவண்ணன் (bookday.in வலைதளத்திலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க: