Your cart is empty.
27 May 2026
மதிப்புரை
…50 வருடங்களுக்கு முன் சென்னை எப்படி இருந்திருக்கும் என்று நேரில் சென்று பார்த்த மாதிரி உணர்வு. தண்ணீருக்குப் பின் இருக்கும் அரசியல், மனிதர்களின் அவலம் — எல்லாவற்றையும் மிக அமைதியான எழுத்தில் சொல்லியிருக்கிறார் அசோகமித்திரன். மூன்று பெண்களின் வாழ்க்கையை தண்ணீர் பிரச்சனையோடு சேர்த்து கொண்டுபோவது இந்த நாவலின் பெரிய பலம். சில சமயங்களில் நான் சிந்திப்பது உண்டு — பெண்களின் எழுத்துகள் மட்டுமே பெண்களின் உலகத்தை வெளிப்படையாகக் காட்டும் என்று. அசோகமித்திரன் அவர்களின் 'தண்ணீர்' நாவல் அந்த எண்ணத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்துவிட்டது. இது ஒரு நாவல் மட்டும் அல்ல, தண்ணீரின் மதிப்பை உணராத நமது வாழ்க்கையை கண்ணாடி மாதிரி காட்டும் ஒரு நினைவுப் பதிவு. நீர் என்பது எதிர்கால சந்ததிக்கான உயிர்…
நன்றி: பாரதி (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவுக்கு:
https://www.instagram.com/p/DY1f8UZmPcG/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA%3D%3D