Your cart is empty.
4 Aug 2026
"சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை"
1. தொண்டைப் புடைத்த காகம் ஒன்று - தன்னுடைய இறந்த அப்பாவின் செயல்களின் அடையாளத்தை ஒரு காகத்தினிடம் கண்டால் ஏற்படும் உணர்வு. அந்த நினைப்பே அவளை அலைக்கழிக்கிறது.
2. வீழ்தல் - தன்னுடைய இறந்த கணவனின் நினைவுகளில் இருந்து மீள முடியாத ஒரு வயதான பெண் எடுக்கும் முடிவு.
3. சிவப்புக் கழுத்துடன் இந்த பச்சைப் பறவை - காது கேளாதவர்களின் உலகத்தைப் பற்றியும், அவர்களின் நெருங்கிய உறவுகளின் வலிகளைப் பற்றியுமான கதை.
4. வில் முறியாத சுயம்வரங்கள் - கணவனை இழந்த 60-களில் இருக்கும் ஒரு பெண் அவளுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் வேறு துணையோடு வாழலாம் என்ற வலுவான கருத்தை வலியுறுத்தும் கதை. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
5. பொய்கை - இப்போ இருக்கும் கால கட்டத்தில் ஒரு நடுத்தர வயது ஆண் எதிர்பாராத விதமாக திடீரென்று ஒரு நாள் பெண்ணாக மாறி வெறும் ஆண்களுக்கு மத்தியில் ஒரு நாள் இரவு கழித்தால் என்ன ஏற்படும் என்பதைப் பற்றிய கதை.
அவளிடம் எஞ்சியிருப்பது அவள்தான். அறுபது ஆண்டுகளின் தென்றலையும் புயலையும் வலியையும் சுகத்தையும் உள்ளடக்கிய அவள்
உடலுக்குப் பல கதைகள் உண்டு. அவை முடிவதில்லை. சில சமயம் அக்கதைகளைத் தேடியெடுக்கவேண்டிவரும். எடுக்கலாம். தேடலாம் இருவர் உடல்களிலும்; விளையாட்டாகச் சிரித்தபடி. உடலுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தபடி.
காதல் ஒரு வித்தியாசமான உணர்வு. சில சமயம் அது நோய். சில சமயம் அது மருந்து. சில சமயம் அது பட்டு மெத்தை சில சமயம் அது புதைகுழி.
இறப்பு பற்றி அதிகமாக எழுதி இருக்கிறார் ஆசிரியர். சில கதைகள் எனக்கு புரியவில்லை. பெரும்பாலும் பெண்களைச் சுற்றித் தான் கதைகள் நகர்கிறது. வித்தியாசமான கதைகளைக் கொண்ட பெண்களைச் சுற்றி எழுதப் பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு படிக்க விருப்பம் என்றால் இந்த புத்தகத்தைப் படியுங்கள்.