ஒரு சில படைப்பாளிகளை மட்டுமே நாம் வெவ்வேறு கோணங்களில் ரசிப்போம்.அப்படிப்பட்ட ரசனையின் வெளிப்பாடாக, தி.ஜா அவர்கள் எழுதிய கதைகளிலிருந்து இசை சார்ந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு,தனித் தொகுப்பாக வெளிவந்துள்ளது
சமீபத்திய ரீல்ஸ்களில் நாம் கவனித்தோமேயானால் பல பாடகர்கள் அனுபல்லவியிலோ,சரணத்திலிருந்தோதான் பாடலை தொடங்குகிறார்கள். பாடலின் மைய உணர்வு அங்கேயே உறைந்திருப்பதால், கேட்பவருடன் அது உடனே ஒன்றிவிடுகிறது.
அதுபோலத்தான் தி. ஜா. அவர்களின் எழுத்தும். கதைகள் பெரும்பாலும் இடைப் பகுதியில் தொடங்கி, முன்னும் பின்னுமாக நகர்கின்றன. விரிவான ஆரம்ப விளக்கங்கள் இன்றி, நேராக உணர்வின் மையத்திற்குள் வாசிப்பவரை அழைத்து சென்று விடுகிறது.
அதனால் தான் அது வெறும் வாசிப்பு அல்ல, அனுபவம்

படிக்கும் தருணத்திலேயே ஒன்றிவிட கூடிய எழுத்து
