இந்தத் தன்வரலாறு நூல், திருநர் அடையாள அரசியல், சமூக ஒடுக்குமுறை, சட்டப் போராட்டம் மற்றும் பெண்ணிய உரையாடல்களின் Connecting point ஆகத் திகழ்கிறது.
தமிழில் வெளிவரும் திருநர் சுயசரிதைகள் பெரும்பாலும் அனுபவப் பதிவுகளாக முடிந்து போகின்றன. ஆனால் இந்நூல், அனுபவத்தை அரசியலாக மாற்றும் முயற்சியாக அமைந்துள்ளது. “பாதிக்கப்பட்டவர்” என்ற கருணை அரசியலை மறுத்து, தன் சுயஅடையாளத்தை நிறுவுவதே இதன் மைய நோக்கம். அதனாலேயே இந்த நூல், தனிப்பட்ட வாழ்க்கைச் சுவடுகளைக் கடந்து சமூக வரலாற்றின் ஓர் ஆவணமாக மாறுகிறது. உடல் மற்றும் அடையாள அரசியல் இந்த நூலில் அடிக்கடி எழும் கேள்வி.
இந்நூல் பாலின ஒடுக்குமுறையை மட்டும் அல்ல, வர்க்கச் சிக்கல்களையும் வெளிக்கொணர்கிறது. வறுமை, பசி, பள்ளியில் அவமானம், தெருவாழ்க்கை அனுபவம் ஆகியவை பாலின ஒடுக்குமுறையுடன் இணைகின்றன. அக்கையின் முக்கியமான பங்களிப்பாக நான் கருதுவது, தனிப்பட்ட அனுபவத்தை சட்டப் போராட்டத்துடன் இணைப்பதே ஆகும். மேலும் இந்நூல் பெண்ணிய இயக்கங்களுடன் ஒரு விமர்சன உரையாடலை மேற்கொள்கிறது.
சுயசரிதை என்ற வகையில், “Confessional Mode” மற்றும் “Political Testimony” ஆகிய இரண்டின் கலவையாக எழுத்து நடை அமைகிறது. தந்தையின் கொடுமை
மருத்துவமனைகளில் "சிகிச்சை" என்ற பெயரில் அவமானப்படுத்தல்
பாரம்பரிய வைத்திய முறைகளின் சித்திரவதை, பள்ளியில் கேலிசெய்யப்பட்ட அனுபவங்கள்
வறுமை மற்றும் பசி.. இவை அனைத்தும் வெறும் சம்பவங்களாக மட்டும் அல்ல; சமுதாயம் பாலினத்தை எவ்வாறு கட்டமைக்கிறது என்பதற்கான சான்றுகளாக பதிவு செய்யப்படுகின்றன.
அக்கையின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் தனிப்பட்ட துன்பத்தை மீறி அரசியல் செயல்பாடாக மாறுகிறது.
திருநர் சமூகத்தின் கலாச்சாரம், ஹிஜ்ரா மரபு, உள்ளார்ந்த உறவுகள், தாய்மை, குடும்பம் போன்றவை மிக நுணுக்கமாக விவரிக்கப்படுகின்றன.
பெண்ணிய இயக்கங்களுடனான முரண்பாடுகளும் பேசப்படுகின்றன.
பாலியல் தொழிலாளிகள் என்ற வகையில் ஒப்பிட்டால், மானதா தேவி எழுதிய 'பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண் தன்னுடைய தவறுகளுக்குத் தானே பொறுப்பெடுத்து வீழ்ச்சியை அங்கீகரிக்கும் பெண். இந்த நூல் வலிகளையும் அவமானங்களையும் வறுமையையும் போராட்டத்திற்கான மூலப்பொருட்களாகச் சேகரித்துக் கொண்ட ஒருவரின் கதை. அகிலாவின் மொழிபெயர்ப்பு அக்கையின் உணர்வைத் துல்லியமாகத் தமிழில் சொல்கிறது. அகிலா வருடத்திற்கு ஒரு மொழிபெயர்ப்பேனும் செய்யக் கோருகிறேன்.