Your cart is empty.
10 Mar 2026
ஓங்கல்கள், வள்ளத்திற்கான மரம், பயணித்தின் போது போடும் வெற்றிலை, எந்த காலத்தில் எந்த மீனுக்காக போடப்படும் வலைகள் என நாவல் முழுவதும் நுண்ணிய தகவல்கள், கதாபாத்திரங்களின் பேச்சோடே கலந்து நம் நினைவில் சேகரமாகிறது.
வீழ்ச்சி, மீண்டெழுதல், கரை மீது எழும் பேரலை என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்க்க முடியும். எவரையும் தனித்து பார்க்க முடியாத கட்டமைப்பில் நாவல் அமைந்திருப்பது சிறப்பு. அதே போல ஒவ்வொரு பகுதியில் துவக்கத்தில் வரும் சங்க கால பரதவர்கள் குறித்த குறிப்பு அந்த பகுதியோடு நெருக்கமாகவே இருக்கிறது