நூல்கள்

பள்ளி இறுதி வகுப்பில் பயிலும் போது ஒரு நாள் குவிஸ் போட்டியில் நான் எதிர் கொண்ட கேள்வி “எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் இனிஷியலில் உள்ள எம்.எஸ். என்பதன் விரிவாக்கம் என்ன”. எனது மனம் வேகமாக வேலை செய்து “மதுரை சதாசிவம்” என்றது. அது தவறான பதில் என்பதை 16 வயது மனம் ஏற்க மறுத்தது. “மதுரை சண்முகவடிவு” என்பது தான் சரி என்பதை வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் உறுதிப்படுத்திக் கொண்டேன். ஏன் அம்மா பெயர் இனிஷியல் ஆக இருக்கிறது என்ற கேள்விக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தேவதாசி மரபில் அதுவே வழக்கம். என்ன? எம்.எஸ். பிராமணர் இல்லையா! எனக்கு தலையே சுற்றியது. அதுவரை அவர்களின் புகைப்படங்கள், பேட்டிகளின் வழியாக ஏற்பட்ட சித்திரம் கலைந்தது. எனது குழப்பம் இன்னும் பலருக்கு இருக்கும்.

பின்னாட்களில் அவர்களது வாழ்க்கை பற்றி வாசித்தபோது, அவரது பிரம்மாண்டமான கலைஉலகப் பயணமும், வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவற்றின் சுருதி சுத்தமான உச்சரிப்பும், எம்.எஸ். ப்ளூ நிறப்புடவை என்று ஒரு பிராண்ட் உருவாகும் அளவுக்கு மல்லிகைப்பூ, குத்துவிளக்கு, பட்டுப் புடவை என்ற பண்பாட்டு அடையாளத்துடன் சதாசிவம் அவர்களுடன் புகைப்படத்தில் மரியாதையான இடைவெளியுடன் அளவாகப் புன்னகைக்கும் எம்.எஸ். மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டார்.

“எம்‌.எஸ். காற்றினிலே கரைந்த துயர்” சிறு புத்தகத்தின் முன்னுரையில் “அவருடைய இசையையும் வாழ்வையும் இணக்கமான முறையில் இயைந்து நோக்க என்னால் இயலவில்லை” என்று டி.எம். கிருஷ்ணா கூறுகிறார். இசைக்கலைஞரான கிருஷ்ணாவால் எம்.எஸ். அவர்களின் கலையுலகப் பயணத்தைக் கூடுதலாக நெருங்க முடிந்திருக்கிறது. தேவதாசி மரபில் வந்த குடும்பத்தில் 1916ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த ஒரு பெண் தன் திறமையை நம்பி 20ஆவது வயதில் சென்னை நோக்கிப் பயணிப்பது அந்தக் காலகட்டத்தில் மிகத் துணிச்சலான முடிவு.
ஆனந்த விகடனில் பணியாற்றிய டி.சதாசிவம் அவர்களிடம் சரண் புகுந்தார் என்றே சொல்ல வேண்டும். இசைத்துறையில் தன் பயணத்தை முன்னெடுக்க அவரே சரியான வழிகாட்டி என்று எம்.எஸ். உள்ளுணர்ந்தார். மீராவாக, சகுந்தலா வாக திரையில் தோன்றினார். சதாசிவம் அவர்களின் மனைவியின் மறைவுக்குப் பின், திருமணம் புரிந்தார்.

பின்னர் எம்.எஸ். அவர்களின் இசை திட்டமிடப்பட்ட சட்டகத்துக்குள் அரங்கேறியது. “அதன் பிறகு நடந்ததை உருமாற்றம் அல்லது உளவியல் ரீதியான மறுகட்டமைப்பு என்று சொல்லலாம்” என்ற டி.எம். கிருஷ்ணாவின் கூற்றைப் புரிந்துகொள்ள நாம் சற்று அந்த காலத்தின் கலையுலக சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். தேவதாசி மரபில் வந்த, நடனக் கலைஞரும்வீணை தனம்மாளின் மகளுமான பால சரஸ்வதியின் வாழ்க்கை “பால சரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்” என்ற தலைப்பில் டக்ளஸ்.எம்.நைட் அவர்களால் எழுதப்பட்டது. அதுவும் அரவிந்தன் அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. பால சரஸ்வதி கலை நிகழ்ச்சிகளை நடத்தியதும், எம்.எஸ் சென்னை சென்றதும் ஒரே காலகட்டம். பால சரஸ்வதியும், எம்.எஸ். அவர்களும் மேற்கத்திய இரவு உடையில் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் அழகான சான்று. அதற்கு முன்னர் 1930ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்பு சட்ட முன்வரைவு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் முன் மொழியப்பட்டது. சதிர் என்றழைக்கப்பட்ட நடனக்கலை பிராமண மேலாதிக்கத்தால் பரதநாட்டியமாக சபாக்களில் நிகழத் துவங்கியது. எம்.எஸ். அவர்களின் கச்சேரிகள் தேவதாசி மரபை விடுத்து, அதிகார ஆதிக்க நேயர் விருப்பமாக மாற்றப்பட்டது. கச்சிதமான கச்சேரிகள் கலாபூர்வ சங்கீதத்தின் இடத்தைப் பிடித்தன. ஆனால் டி.எம். கிருஷ்ணா, வாழ்க்கை அனுபவம் என்பது பிசிறற்று, சகல ஒழுங்குகளுடனும் இருப்பதல்ல என்று விமர்சிக்கிறார்.அவர் ஒரு பெரும் புதிராகவும் இருந்தார் என்பது எத்தனை உண்மை!!

டி.எம். கிருஷ்ணா எம்.எஸ். அவர்களின் இசையுலகப் பயணத்தை ஆழ்ந்து அவதானித்து இச்சிறு பிரசுரத்துக்குள் அடக்கியிருக்கிறார். இது மட்டுமே முழுமையாக எம்.எஸ். அவர்களின் வாழ்வை, இசைப் பயணத்தை சொல்லும் பிரசுரம் என்று சொல்லவில்லை. ஆனால், இவ்வாறான மாறுபட்ட கோணத்தில் பார்க்கவும் நாம் திறந்த மனதுடன் முன்வர வேண்டும் என்பதற்கான முன்முயற்சியே. டி.எம். கிருஷ்ணா அவர்களின் இசைத்துறை நடவடிக்கைகள் நாம் அறிந்ததே. மரபின் பெயரால் இருக்கும் இறுக்கத்தை உடைக்கும் கலகக் குரலாக நான் உணர்வேன். அவரது கச்சேரிகளும் அவ்வாறே தனித்துவமானது. இந்த பிரசுரம் எம்.எஸ். அவர்களின் இசை மீதான ஆழமான அன்பின் வெளிப்பாடு. அரவிந்தன் அவர்களின் மொழிபெயர்ப்பு மிகவும் நெருக்கமாக உணரச் செய்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

எம்.எஸ். எனும் அற்புதத்தை வேறொரு கோணத்தில் தரிசிக்கலாம். வைரத்தை எப்படி வைத்துப் பார்த்தால் என்ன . . . பரிபூரண ஒளி தானே.

எம்.எஸ். எனும் அற்புதம் -

ரஞ்சனி பாசு(முகநூல் பதிவு

21 Oct 2023

• பகிர்: