Your cart is empty.
க. மாரியப்பன்
பிறப்பு: 1976
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆந்திரப் பிரதேசம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி - மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். தெலுங்கு இலக்கியங்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். ‘மஹாவித்துவான்’, ‘அத்தங்கி மலை’ ஆகியவை இவரின் மொழிபெயர்ப்புகளாகும். ‘அத்தங்கி மலை’ மொழிபெயர்ப்பு நூலுக்கு 2023இல் அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது கிடைத்தது. மஹாவித்துவான் என்ற இவரின் தெலுங்கு மொழிபெயர்ப்பு நூலுக்குத் திருப்பூர் இலக்கியவிருது 2023இல் வழங்கப்பட்டது. ஒப்பியல் இலக்கியம், பக்தி இலக்கியம், சங்க இலக்கியம் குறித்துத் தீவிரமான அவதானிப்போடு எழுதியும் பேசியும் வருகிறார்.