Your cart is empty.
மா. அண்ணாதுரை
பிறப்பு: 1968
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள தென்னங்குடிபாளையம் என்ற சிற்றூரில் டி.ஆர். மாரியப்பா செல்லம்மாள் இணையருக்கு மகனாக 1969இல் பிறந்தார். ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்ட நூலகத்திற்குச் செல்லும் வழக்கமும் இலக்கியங்களின் அறிமுகமும் அவருடைய வாழ்க்கையின் முக்கியமான திருப்பமாக அமைந்தன. பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, இடைநிலை ஆசிரியர் பயிற்சிபெற்ற அவர் சுமார் எட்டாண்டுகள் தமிழக அரசின் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றினார். அந்தக் காலக்கட்டத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்வரை அஞ்சல் வழியில்பயின்ற அவர், 1995ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று இந்தியத் தகவல் பணியில் சேர்ந்தார். தமிழ், ஆங்கிலத்தோடு டெல்லியில் பணியாற்றிய காலக்கட்டத்தில் இந்தி, ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ்மொழிகளையும் கற்றார். தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார்.