Your cart is empty.
அரும்பு சுப்ரமணியன்
பிறப்பு: 1961
ஈரோட்டில் பிறந்த அரும்பு, அவருடைய தாத்தா மீனாட்சிசுந்தர முதலியார் நிறுவிய கலைமகள் கல்வி நிலையத்தில் படித்தவர்.
காலஞ்சென்ற இவரது தந்தை எஸ்.பி. சுப்ரமணியன் கம்யூனிஸக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். செம்பியன் என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட ரஷ்யரான செமியோன் ரூதினுடன் பேனா நண்பரானார். செம்பியன் இவருக்கு அரும்பு என்ற பெயரைச் சூட்டினார்.
கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும்போது இவருடைய தாயாரும் ஆங்கில இலக்கியம் பயில, இருவரும் ஒரே வருடம் இளங்கலைப் பட்டம் பெற்றனர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ரஷ்ய இலக்கியம் படிக்க 1981இல் சோவியத் ரஷ்யா சென்றார். முதல் வருடம் ரஷ்ய மொழியைப் படித்த பிறகு, டான் நதிக் கரையில் அமைந்திருக்கும் ரஸ்தோவ் பல்கலைக் கழகத்தில் எட்டு ஆண்டுகள் இலக்கியப் படிப்பை மேற்கொண்டார். அப்போது இவரது தாயாரும் மாஸ்கோ வந்து ஆறு மாதம் ரஷ்ய மொழியைப் பயின்றார்.
1990இல் இந்தியா திரும்பிய பின்னர் சில ரஷ்ய நிறுவனங்களில் பணியாற்றினார். தற்போது கவிஞராக, ரஷ்ய மொழிபெயர்ப்பாளராகச் சென்னையில் வசித்துவருகிறார்.
ஐந்தாண்டுகள் தன்னை முழுமையாக இந்த மொழிபெயர்ப்புக்காக ஒப்புக்கொடுத்த அரும்புவுக்கு, தஸ்தயேவ்ஸ்கி தன் நாவலில் வரும் பாத்திரங்களின் வலியின் ஒரு பகுதியைத் தரவும் தயங்க வில்லை.
