Your cart is empty.
எத்திராஜ் அகிலன்
பிறப்பு: 1954
இந்த நூலை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கும் எத்திராஜ் அகிலன், ஈரோடு ஸ்ரீ வாசவி
கல்லூரியில், ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகவும் இணைப் பேராசிரியாராகவும்
பணியாற்றி, கல்லூரியின் முதல்வராகப் பணி நிறைவுசெய்தவர். துருக்கி நாவலாசிரியர் அஹமத்
ஹம்தி தன்பினாரின் ‘நேர நெறிமுறை நிலையம்’, ஐஸ்லாந்து நாட்டின் நொபேல் நாவலாசிரியர்
ஹால்டார் லேக்ஸ்நஸின் ‘மீனும் பண் பாடும்’, துருக்கி நொபேல் எழுத்தாளர் ஓரான் பாமுக்கின்
‘கருப்புப் புத்தகம்’, செக் மொழி எழுத்தாளர் மைக்கேல் அய்வாஸின் ‘மற்ற நகரம்’ ஆகிய
நாவல்களை இவருடைய மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. மா ஜியான் எனும்
சீன எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பான ‘நாக்கை நீட்டு’ எனும் நூல் இவருடைய
மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.
blog: http: ethirajakilan.blogspot.com
தொடர்புக்கு: 9443793645
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
என்னை மாற்று
-ஸிந்தஸிஸ் எனும் செயற்கைப் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களை
உண்டு வாழும் மேலும்