Your cart is empty.
ஜெனி டாலி அந்தோணி
பிறப்பு: 1985
போடிநாயக்கனூரில் பிறந்தவர். பள்ளிக் கல்வியையும் இளநிலைப் பட்டப்படிப்பையும் மதுரையில் பயின்ற இவர், முதுகலைப் பட்டப் படிப்பிற்காகச் சென்னை வந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. கல்லூரி ஆசிரியராகவும் தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிகையாளராகவும் பணியாற்றிய இவர் தற்போது இயக்குநர் பா. இரஞ்சித் துடன் திரைப்படத் துறையில் பணியாற்றி வருகிறார். மொழிபெயர்ப்பாளராக இவரது இரண்டாவது வெளியீடு இது. மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பான 'உலக கிளாசிக் கதைகள்' (2014) இவரது முதல் வெளியீடு.
