Your cart is empty.
க. சுபாஷிணி
பிறப்பு: None
மலேசியாவில் பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்துவருபவர். கணினிப் பொறியியல் துறையில் ஜெர்மனியில் பணிபுரிகிறார். தமிழ் மரபு, வரலாற்று ஆய்வாளர். தமிழை உலகம் முழுமைக்கும் கொண்டு செல்லும் முனைப்பில் உலகின் பல நாடுகளுக்குத் தொடர்ந்து பயணித்துவருபவர். தமிழியல் தொடர்பான பண்டைய தமிழ் ஆவணங்களின் இணைய மின்னாக்கப் பணிகளில் முன்னோடியாகவும், 'பன்னாட்டு தமிழ் மரபு அறக்கட்டளை'யின் தலைவராகவும் விளங்குபவர். ஐரோப்பாவிற்கும் தமிழகத்துக்குமான நீண்டகாலத் தொடர்புகள், ஐரோப்பியர்களின் தமிழ் இலக்கிய, இலக்கண முயற்சிகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு தொடர்ந்து ஆராய்ந்துவருபவர்.
