Your cart is empty.
முடவன் குட்டி முகம்மது அலி
பிறப்பு: 1953
இயற்பெயர் மு.கா. முகம்மது அலி. சொந்த ஊர் கடையநல்லூர். தாயார்: நாகூர் மீறாள். தந்தை: காதர் நாகூர். பெங்களூர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்தார். பணி ஓய்விற்குப் பின்னர் சொந்த ஊரான கடையநல்லூரில் வசிக்கிறார். சபாநக்வி எழுதிய ‘In Good Faith’, நோபல்பரிசு பெற்ற ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா எழுதிய ‘Meek Heritage’, Jairam Ramesh எழுதிய ‘Indira Gandhi, A Life in Nature’ ஆகிய நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவை ‘வாழும் நல்லிணக்கம்’, ‘சாதுவான பாரம்பரியம்’, ‘இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு’ எனக் ‘காலச்சுவடு’ வெளியீடாக தமிழில் வெளிவந்துள்ளன. ‘முடவன்குட்டி’ என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை என எப்போதாவது எழுதுவதுண்டு. அவை திண்ணை, சமரசம், உயிர்எழுத்து ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
மனைவி: தாமரை. மகன்: முகம்மது கஸ்ஸாலி.
மின்னஞ்சல்: thamaraiali@gmail.com