Your cart is empty.

ப. விமலா
பிறப்பு: 1987
ப. விமலா
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளமுனைவர், முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார். ‘தொல்காப்பிய மலையாள மொழிபெயர்ப்புகள்’ என்னும் தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வினை ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 2019இல் நிறைவு செய்துள்ளார். ‘மலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்’ என்னும் நூலும் ‘விவேகானந்தம்’ என்னும் புதின மொழிபெயர்ப்பு நூலும் இவரின் குறிப்பிடத்தக்க நூல்கள்.
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை (தேனி) இவரது இலக்கியப் பணிக்காக ஜி. நாகராஜன் நினைவு இலக்கியச் சிற்பி விருதினை (2020) வழங்கிச் சிறப்பித்துள்ளது. தற்போது சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.