Your cart is empty.
சு. கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு: 1929
சு. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டையில் பிறந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவருக்கு ஹிந்தி,பெங்காலி. ஆங்கிலம், சமஸ்கிருதம், ஜெர்மன் மொழிகள் தெரியும். இந்திய அரசின் தணிக்கைத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கிருஷ்ணமூர்த்தி,நன்றிக்கு ஒரு விலை', 'மனிதம்' சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர். ஆங்கிலத்தில் 'The Peasant and other Stories', 'Modern Aesop Fables' என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. காஜி நஸ்ருல் இஸ்லாம், சரத் சந்திர சட்டர்ஜி, பிரேம்சந்த், ஈஸ்வர சந்திர வித்யாஸாகர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதியிருக்கிறார். இலக்கியச் சிந்தனை விருது,இலக்கியச் சூடாமணி விருது. வங்காள அரசின் ரபீந்திர ஸ்மிருதி புரஸ்கார், சாகித்ய அக்காதெமியின் மொழிபெயர்ப்புக்கான விருது, நிகல் வங்காள சாகித்ய சம்மேளத்தின் விருது பெற்றுள்ளார். தமிழிலிருந்து 60க்கும் மேற்பட்ட நூல்களை பெங்காலி, ஹிந்தி, ஆங்கில மொழிகளுக்கும், அம்மொழிகளி லிருந்து தமிழுக்கும் மொழிமாற்றம் செய்திருக்கிறார் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் வங்காளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
