Your cart is empty.
புழுதிக்குள் சில சித்திரங்கள்
-சமகால வரலாறு என்பது மிகவும் சவாலான ஒரு அறிவுத் துறை. தரவுகளும் தகவல்களும் அதிகம் கிடைக்கும் என்றாலும் சமகாலத்தைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி எடை போடுவதற்கான கால இடைவெளி உருவாகியிருக்காது என்பது இதைச் சவால் மிகுந்ததாக ஆக்குகிறது.
இதழியல் சார்ந்த எழுத்தின் ஒரு பகுதியாக விளங்கக்கூடிய இவ்வகை எழுத்தில் எழுத்தாளர் தேவிபாரதி மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டிருக்கிறார். தான் நேரடியாகக் கண்ணுற்ற, அனுபவித்த இரண்டு அரசியல் நிகழ்வுகளைத் தன் வாழ்க்கை அனுபவங்களுடன் இணைத்துப் பார்க்கிறார். நெருக்கடி நிலைக் காலகட்டத்தையும் எம்ஜிஆர் உடல்நலம் குன்றியிருந்தபோது நடைபெற்ற தேர்தல் காலகட்டத்தையும் படைப்பாளியின் கண்ணோட்டத்துடன் விவரிக்கிறார். இயல்பாக இழையோடும் நகைச்சுவையும் நுட்பமான அவதானிப்புகளும் கொண்ட இந்தப் பதிவுகளைச் சமகால வரலாற்றின் படைப்பூக்கம் மிகுந்த எழுத்து என்று சொல்லலாம்.