Your cart is empty.
வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல்
ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந்துத்துவம் பற்றிய நுண்மையான பார்வையும் பகுப்பாய்வும் இக் கட்டுரைகளின் சிறப்பு.
ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந் மேலும்
இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப் மேலும்
கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத மேலும்
‘சுதேசமித்திரன்’, ‘தேசபக்தன்’, ‘தமிழ் ஸ்வராஜ்யா’, ‘தமிழ்நாடு’, ‘இந்தியா’, ‘ஜெய பாரதி’, ‘ஆனந்த குண மேலும்
‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில பு மேலும்
1921 - 1939 காலகட்டத்தில் வ. வே. சு. ஐயர், அ. மாதவையா, றாலி, பி.எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்ய மேலும்
உள்ளூர் ஜமீன்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி ‘எழு மேலும்
அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு ‘ஹிந்து’ நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதமாக மேலும்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியான சுப உதயகுமாரன் குடும்பம் சமூகம் குறித்து எழுதியுள்ள கட் மேலும்
அடிப்படையான மானுட உணர்வுகளின் எல்லையின்மையைத் தம் புனைகதைகளில் திரும்பத் திரும்ப எழுதிய தி. ஜானகி மேலும்
ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந்துத்துவம் பற்றிய நுண்மையான பார்வையும் பகுப்பாய்வும் இக் கட்டுரைகளின் சிறப்பு.
இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் ஒருவரால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ‘நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக எழுச்சி பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் இயல்பை ஆராய்வதோடு, நவீன நாகரிகம் பற்றியே அடிப்படையான கேள்விகளையும் இந்நூல் எழுப்புகிறது..
கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்.’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்த நூல்.
‘சுதேசமித்திரன்’, ‘தேசபக்தன்’, ‘தமிழ் ஸ்வராஜ்யா’, ‘தமிழ்நாடு’, ‘இந்தியா’, ‘ஜெய பாரதி’, ‘ஆனந்த குண போதினி’, ‘ஆனந்த போதினி’, ‘விகடன்’, ‘மணிக் கொடி’, ‘தினமணி’, ‘ஹிந்துஸ்தான்’ பத்திரிகைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 1933இல், தமது பதினாறாம் வயதி லேயே, ஆனந்த விகடன் வழியாகத் தமிழ்ப் பத்திரிகை உலகில் நுழைந்துவிட்ட ரா. அ. பத்மநாபன், ஜெயபாரதி (1936-37), ஹநுமான் (1937), ஹிந்துஸ்தான் (1938), தினமணிக் கதிர் (1965-66) முதலான இதழ்களில் பணியாற்றியவர். ஓர் ஆராய்ச்சியாளராகத் தமிழ் இதழ்களைத் தேடிப்படித்ததோடு, தமிழ் இதழியலின் வளர்ச்சியை நேரடியாகப் பார்த்தும் பணியாற்றியும் வாழ்ந்தும் அனுபவித்தவர். அந்த வகையில் நிகழ்ச்சிக் கோவையாகவும் தகவல் களஞ்சியமாகவும் இந்நூல் சுவைபட அமைந்துள்ளது. ஸ்வராஜ்யா, தமிழ்நாடு, இந்தியா, ஹிந்துஸ்தான் முதலான காண்பதற்கரிய இதழ்களைப் பற்றிய முக்கியச் செய்திகளும் இந்நூலில் அடங்கியுள்ளன.
‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மைகொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் அல்லாமல் தன்னுணர்ச்சியோடு காணவைக்கிறது.
வரலாற்றை அறிவதற்கான ஆகிவந்த முறைகளைத் தாண்டிச் செல்கிறது ஆ. சிவசுப்பிரமணியனின் இந்த நூல். மக்களிடையே புழங்கும் வாய்மொழி வழக்காறுகளும் வழிபாட்டு முறைகளும் வரலாற்றை அறிவதற்கான சான்றுகளாக இருக்க முடியும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. ஆசிரியரின் தர்க்கப்பூர்வமான ஆய்வு முறை புதிய தரவுகள் மூலம் வரலாற்றின் மற்றொரு பகுதியை அடையாளம் காட்டுகிறது. வரலாறு, சமூகம் குறித்த நம்முடைய பார்வையை மறுபரிசீலனை செய்துகொள்ளத் தூண்டுகிறது.
1921 - 1939 காலகட்டத்தில் வ. வே. சு. ஐயர், அ. மாதவையா, றாலி, பி.எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, சங்கு ஸுப்ரமண்யன், புதுமைப்பித்தன், பெ.கோ. சுந்தரராஜன், ந. சிதம்பர சுப்ரமண்யன், தி. ஜ. ரா., மௌனி, லா.ச. ராமாமிர்தம் ஆகிய கதாசிரியர்கள் எழுதிய புதுமையான உருவ -உள்ளடக்கங்களைக் கொண்ட சிறுகதைகளைக் காலவரிசைப்படி எடுத்துக்கொண்டு, சிறுகதை வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பு என்ன, நிறைகுறைகள் என்ன என்பவற்றை விரிவாக ஆராய்கிறது ‘தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.’ இலக்கிய வாசகர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுடைய விமர்சன நூல்.
உள்ளூர் ஜமீன்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி ‘எழுக, நீ புலவன்!’. முக்கால் நூற்றாண்டுப் பாரதி ஆய்வுக்குப் பிறகும் இன்னும் வெளிச்சம் பெறாத செய்திகளைப் புதிய விவரிப்புகளுடன் முன்வைக்கின்றன இந்நூல் கட்டுரைகள். பாரதி எழுதத் தவறிய எட்டயபுர வரலாறு, பாரதி வியந்த தாகூர், யார் என்று தெரியாமலேயே பாரதியை விவரித்த ஆங்கிலேய நிருபர் ஹென்ரி நெவின்சன், பாரதி காலத்து முக்கிய சர்வதேச அரசியல் நிகழ்வான முதல் உலகப் போர் பற்றிய அவனுடைய பார்வை, சுயஎள்ளலும் கழிவிரக்கமும் கூடிய பாரதி சுயசரிதைகளின் பின்னணி, ‘எழுக, நீ புலவன்!’ என்று பாரதிதாசனைப் பாரதி இனம்கண்டது, பாரதியின் எழுத்து வாழ்க்கை - இதழியல் பணி . . . எனப் பல்வேறு பொருள்களில் ஒளி பாய்ச்சும் கட்டுரைக் கோவை இந்நூல். பாரதி ஆய்வுக்கு முக்கியப் பங்காற்றியுள்ள ஆ. இரா. வேங்கடாசலபதியின் விறுவிறுப்பான நடையில் அமைந்த சுவையான கட்டுரைகள். ~ “பாரதி ஆய்வில் செயல்பட்டவர்கள் அநேகர். இந்த ஆய்வுகள் பொது வாசகனிடம் பாரதியை ஒரு திருஉருவாகவே அறிமுகம் செய்பவை; அவனுடைய செயல்பாடுகள் அனைத்தையும் அவதார லீலைகள் போன்று முன்வைப்பவை. அவற்றை இம்மையியல் சார்ந்ததாக நிலை நிறுத்தியிருப்பவர் ஆ. இரா. வேங்கடாசலபதி. பாரதியின் மேன்மைகளுடன் குறைகளையும் பிழைகளையும் சரிவுகளையும் ஆய்ந்து அவனுக்கு மானுட முகம் அளிப்பவை சலபதியின் ஆய்வுகளும் பதிப்புகளும்.” -- சுகுமாரன்
அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு ‘ஹிந்து’ நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதமாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய ஆங்கில நாளேடாக விளங்கிவரும் ‘ஹிந்து’வில் பாரதி எழுதிய இருபது கடிதங்களும் குறிப்புகளும் அடங்கிய நூல் இது. இவற்றில் செம்பாதிக்கும் மேலானவை முதன் முறையாக நூல்வடிவம் பெறுகின்றன. அரைகுறையான நறுக்குகளாகவும் செப்பமற்ற பாடங்களோடும் நிலவிய பாரதி எழுத்துக்கள் சில இந்நூல்வழி முழுமையும் செப்பமும் துல்லியமான காலக்குறிப்பும் பெறுகின்றன. இவை தவிர, பாரதியோடு செய்யப்பட்ட ஒரே நேர்காணல் எனக் கருதலாகும் ஒரு கட்டுரையும் முதன்முறையாக நூல்வடிவம் பெறுகிறது.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியான சுப உதயகுமாரன் குடும்பம் சமூகம் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின் அடிப்படையாகக் குடும்பம் இருப்பதால் குடும்ப உறவுகளைச் சீர்படுத்தினால் சமூக உறவு சீர்படும் என்னும் நோக்கத்தில் இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு, ஆண் - பெண் உறவு, காதல், காமம் போன்ற பல விஷயங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதைத் தீர்க்கமாக யோசித்து அவற்றைக் கட்டுரைகளாக்கியுள்ளார் சுப. உதயகுமாரன். அவருடைய அனுபவம், சமூகப் புரிதல் ஆகியவை காரணமாக மனித உறவு குறித்த அடிப்படையான புரிதல்களை எல்லோரும் உணர்ந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக எழுதிச் செல்கிறார். கட்டுரைகளில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆசிரியரின் தொனியைவிட ஆலோசனை கூறும் அன்பான அண்ணனின் தொனியே மேலோங்கியுள்ளது. இந்நூலை வாசிப்பவர்களுக்கு உறவுகள் பற்றிய புதிய தரிசனம் கிடைப்பதுடன் அவர்களின் அன்றாட வாழ்வை எளிதாகக் கையாளவும் வழிகிடைக்கிறது.
அடிப்படையான மானுட உணர்வுகளின் எல்லையின்மையைத் தம் புனைகதைகளில் திரும்பத் திரும்ப எழுதிய தி. ஜானகிராமன், ஆண் பெண் என்ற வெளிபேதத்தைக் கடந்து உயிர் என்ற உள்விரிவை நோக்கி முன்நகர்ந்தவர். நூற்றாண்டு காணும் தி.ஜா. (1921 - 2021) பற்றிய 102 விமர்சனக் கட்டுரைகளின் பெருந்தொகுதியே இந்நூல். அழகியல்வாதிகள், இடதுசாரிகள், திராவிடவியலாளர்கள், பெண்ணியவாதிகள், உளவியல் நோக்கினர், விளிம்பைப் போற்றுவோர், நவீனத்துவர்கள், பின்நவீனர்கள், கல்வியாளர்கள் எனத் தம்முள் முரண்படும் பல தரப்பினரையும் ஒன்றிணைக்கும் ஒரு மகத்தான விசையாகத் தி. ஜானகிராமன் மறுஉயிர்ப்புப் பெறுவதன் சாட்சியமாகிறது இந்நூல்.