Your cart is empty.
திணைமயக்கம் (அல்லது) நெஞ்சொடு கிளர்தல்
சேரனின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் திணை மயக்கமாகவும் நெஞ்சொடு போரிடுவனவாகவும் உள்ளன. மிக ஆழமானவை. இக்கவிதைகளில் அகமும் புறமும் பிரிய இயலாத நிறங்களின் திணைகளாக வரிகின்றன. அரேபியக் கவிதை வடிவமான கஜல், பசவண்ணாவின் வசனங்கள் ஆகியவற்றையும் நினைவுபடுத்தும் இக்கவிதைகள் மெல்லிய இசையைத் தூவுகின்றன. காமம், அகதி நிலை, போர், காதல், சஞ்சலம், வன்முறை, பிரிவின் வெளி என வியப்பூட்டும் நவீன உள்ளார்ந்த பார்வையை இவை வெளிப்படுத்துகின்றன.