Your cart is empty.
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
அரை நூற்றாண்டுக்கும் மேல் எழுதிவந்த சுந்தர ராமசாமியின் சிறுகதைகளில் புதிய களங்கள், புதிய கூறுமுறைகள், மாறுபட்ட மொழி வெளிப்பாடுகள், கதையின் அமைப்பு சார்ந்த பரிசோதனைகள் ஆகியவற்றைக் காணலாம். அவருடைய சிறுகதைப் பயணத்தின் கடைசித் தடங்கள் இந்தச் சிறுகதைகள்.
சு.ரா.வின் படைப்பு மொழியும் கையாளும் விஷயங்களும் கதை சொல்லும் பாணியும் இந்தக் கதைகளில் புதிய வடிவங்களை மேற்கொள்கின்றன. அமைதி, நிதானம், நுட்பம், மௌனம் ஆகியவை நிரம்பிய இந்தக் கதைகள் வாசகருடன் மிக நெருக்கமாக உரையாடுகின்றன. சு.ரா.வின் மொழியழகு இக்கதைகளில் புதுக்கோலம் பூணுகிறது. பூ மலர்வதைப் போன்ற இயல்பான அங்கதம் மார்கழி மாதக் காற்றில் கலந்த குளிர்போலக் கதைகளில் கலந்திருக்கிறது.


